December 8, 2022

ஸ்கோடா செடான் மாடல் விலையை உயர்த்தியது

சென்னை, நவ.7

ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்லேவியா மாடலின் விலையை மீண்டும் உயர்த்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விலை உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இம்முறை ஸ்கோடா ஸ்லேவியா விலை ரூ.40 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

முன்னதாக ஜூன் மாத வாக்கில் ஸ்கோடா ஸ்லேவியா மாடல் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய விலை உயர்வு ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும். அதன்படி ஸ்கோடா ஸ்லேவியா ஆம்பிசன் 1.0 ஏடி மாடல் விலை ரூ. 40 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்லேவியா ஸ்டைல் 1.0 எம்டி விலை ரூ. 31 ஆயிரமும், ஆக்டிவ் 1.0 எம்டி மற்றும் ஆம்பிசன் 1.0 எம்டி வேரியண்ட்களின் விலை ரூ.30 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா ஸ்லேவியா ஸ்டைல் 1.0 எம்டி (சன்ரூப் இல்லா) மாடல் மற்றும் ஸ்டைல் 1.5 எம்டி விலை ரூ. 21 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் மாடலான 1.5 டிஎஸ்ஜி விலை ரூ.1000 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டைல் 1.0 எம்டி மாடலின் விலை ரூ. 11 ஆயிரம் அதிகரித்துள்ளது.

Spread the love