November 29, 2022

ஷா பாலிமர்ஸ், சுலா வினியார்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியிடசெபி அனுமதி வழங்கியது

புது தில்லி, நவ.9

ஷா பாலிமர்ஸ், சுலா வினியார்ட்ஸ்’ இரு நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி, அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

பாலிமர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஷா பாலிமர்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் போது 1.02 கோடி புதிய பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகள் எதுவும் விற்பனை செய்யப்படப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உதய்பூரை அடிப்படையாக கொண்டு, இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சுலா வினியார்ட்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் போது, புதிய பங்குகள் எதையும் விற்கப்போவதில்லை. முழுக்க முழுக்க நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் உள்ள 2.6 கோடி பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய உள்ளது. ஒயின் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் இந்நிறுவனம், 13 பிராண்டுகளில், 56 விதங்களில் ஒயினை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்துக்கு, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் ஆலைகள் உள்ளன.

Spread the love