December 9, 2022

வோல்டாஸ் பங்குகளை 2 சதம் அதிகரித்தது எல்ஐசி

புது தில்லி, நவ.9

எல்ஐசி நிறுவனம், தன் கைவசம் உள்ள வோல்டாஸ் நிறுவனத்தின் பங்குகளை, மேலும் 2 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: எல்ஐசி நிறுவனம், பொது சந்தைவெளியில், ரூ.635 கோடி மதிப்பிலான வோல்டாஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த பங்குகளை, கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி முதல், நவம்பர் 4ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வாங்கியிருப்பதாகவும், எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, எல்ஐசி நிறுவனத்தின் வசம் உள்ள வோல்டாஸ் பங்குகளின் எண்ணிக்கை, 2.27 கோடியில் இருந்து, 2.94 கோடி பங்குகளாக அதிகரித்துள்ளது. இது, 8.9 சதவீதமாகும். வோல்டாஸ் நிறுவனம் ஏசி ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Spread the love