December 8, 2022

வைப்பு நிதி திரட்டுவதில் வங்கிகள் தீவிரம்: ஆர்பிஐ தகவல்

புது தில்லி, நவ.21

வைப்பு நிதி திரட்டுவதில் வங்கிகள் தீவிரம் காட்டி வருவதால், வங்கிகள் அளிக்கும் கடன்களை விட, நான்கு மடங்கு அதிகமாக வைப்பு நிதி திரட்டியிருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நவம்பர் 4ம் தேதி வரையிலான இரு வார காலத்தில், வங்கிகள் திரட்டிய வைப்பு நிதித்தொகை, அவை வழங்கிய கடனை விட நான்கு மடங்கு அதிகம் என ஆர்பிஐ புள்ளிவிபரங்கள் மூலம் அறிய முடிவதாக தெரிய வந்துள்ளது. மேலும், வங்கிகள் வைப்பு நிதி திரட்டுவதில் தீவிரம் காட்டி வருவதும், வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயரத் துவங்கியிருப்பதும், வைப்பு நிதி மூலமான நிதி அதிகரித்து இருப்பதற்கான காரணமாக கருதப்படுகிறது. பல்வேறு வங்கிகள், ‘டிஜிட்டல்’ மேடை மூலமாகவும் வைப்பு நிதி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. மேலும், லிக்விட் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட நிதியில் ஒரு பகுதி வைப்பு நிதிக்கு வரும் போக்கு நிலவுவதாகவும் கருதப்படுகிறது.

எனினும், வைப்பு நிதி மூலமான தொகை மற்றும் வங்கிகள் அளிக்கும் கடன் தொகைக்கும் இடையில் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதும் ஆய்வுக்கு உரியது என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Spread the love