September 27, 2022

வேலகவுண்டம்பட்டி துவக்கப்பள்ளியில்
உள் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், செப்.2

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், வேலகவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.28.50 லட்சம் மதிப்பீட்டில் உள் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து, வேலகவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, அங்கன்வாடி பணியாளர்களிடம் பரமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

அங்கன்வாடிகளில் பயிலும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதா மாதம் எடை மற்றும் உயரம் அளவிடுதல் ஊட்டச்சத்து நிலை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்கன்வாடி மையத்திலுள்ள சமையல் கூடத்தில் வழங்கப்பட்டு வரும் உணவுகள் விவரங்கள் கேட்டறிந்து அட்டவணைப்படி குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றதா என மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்கும் வகையிலான விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு இருப்பதை பார்வையிட்டார்.

Spread the love