February 3, 2023

வேகத்தை அதிகரிக்க புதிய தொழில்நுட்பம் 2025ல் ரயில்வே அறிமுகம் செய்ய திட்டம்

புது தில்லி, நவ.26

வளைவுப் பாதையில் பயணிக்கும்போது வேகத்தைக் குறைக்காமல் இருப்பதற்கான புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரயில்கள் 2025ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: வளைவுப் பாதையில் ஏற்படும் மைய விலக்கு விசையைத் தடுக்கும் வகையிலான ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அத்தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் 2025ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளதாவது:

2025க்குள் 400 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் 100 ரயில்களில் இந்தப் புதிய தொழில்நுட்பம் இடம்பெறும். அதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2025-26ம் நிதியாண்டு முதல் வந்தே பாரத் ரயில்களை ஏற்றுமதி செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது. மேலும், ஐரோப்பா, தென் அமெரிக்கா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகள் வந்தே பாரத் ரயில்களுக்கான முக்கிய சந்தையாக இருக்கும். படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் 2024ம் ஆண்டின் முதல் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும். சர்வதேச தரத்துடன் அந்த ரயில்கள் சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்படும் என்று தெரிவித்தார். இத்தாலி, போர்ச்சுகல், ஸ்லோவீனியா, ஃபின்லாந்து, ர´யா, செக் குடியரசு, பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, சீனா, ஜெர்மனி, ருமேனியா ஆகிய நாடுகளில் ஏற்கெனவே புதிய தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது.

Spread the love