October 3, 2022

வெளிநாடுகளில் இருந்து டுரோன்கள்
இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு தகவல்

புது தில்லி, பிப்.10

வெளிநாடுகளில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே டுரோன்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடை பிறக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ராணுவ பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்வதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் டுரோன்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love