October 3, 2022

வெனீஸ் எக்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் அறிமுகப்படுத்த கோமகி திட்டம்

பெங்களூரு, செப்.22

கோமகி நிறுவனம் தற்போது வெனீஸ் எக்கோ என்ற அதிக வேக எலெக்ரிக் ஸ்கூட்டரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால் அதிக வேக எலெக்டரிக் ஸ்கூட்டரை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

தற்போது கோமகி நிறுவனம் இந்த வெனீஸ் எக்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மொத்தம் 7 நிறங்களில் விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இது போக இந்நிறுவனம் டீஸ் செய்துள்ள டிஎஃப்டி ஸ்கிரீன் நேவிகேசனிற்கு சிறப்பாகச் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் மியூசிக் பிளேயரும் இடம் பெறும் எனத் தெரியவிக்கப்பட்டுள்ளது.

வெனீஸ் எக்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் மல்கோத்ரா தெரிவித்துள்ளதாவது: “கோமகி நிறுவனம் பசுமையான மாசு இல்லாத வாகனங்களைத் தயாரிப்பதில் தரமான தயாரிப்புகளை வழங்கும் நிறுவனம் என மக்கள் மத்தியில் பெயர் எடுத்துள்ளது. எங்கள் தயாரிப்புகள் அதிக திறன், அதிக பலம், சிறப்பான டிசைன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவில் நீண்ட காலம் உழைக்கும் தயாரிப்புகளாகும். வெனீஸ் எக்கோ ஸ்கூட்டரும் இதில் முக்கிய பங்கை வகிக்கும். வாடிக்கையாளர்கள் பலர் விரும்பும் படி இதை வடிவமைத்துள்¼ளாம்” எனக் கூறினார்.

இந்த வெனீஸ் எக்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் லித்தியம் அயான் ஃபெர்ரோ பாஸ்பேட் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரி தீ பிடிக்காத தன்மை கொண்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. அந்த பேட்டரியை தான் இந்த வாகனத்தில் பயன்படுத்தியுள்ளது என்றார். இதன் விலை ரூ79,999 என்ற எக்ஸ்ஷோரூம் அடிப்படையில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

Spread the love