February 3, 2023

விவோ ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி தடுத்து நிறுத்தம்?

புது தில்லி, டிச.8

நாட்டில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட இருந்த 27,000 விவோ ஸ்மார்ட்போன்கள் மத்திய அரசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: சீனாவை சேர்ந்த விவோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் சார்பாக தயாரிக்கப்பட்ட ரூ. 123 கோடி மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை தவறான விவரங்கள் மற்றும் மதிப்பை கூறி ஏற்றுமதி செய்யப்பட்டதாக நிதி அமைச்சகத்தின் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தில்லி விமான நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துக்கு இந்திய செல்லுலார் மற்றும் மின்னணுவியல் சங்கத்தின் தலைவர் பங்கஜ் மோங்கிந்த்ரா எழுதியுள்ள கடிதத்தில், அமலாக்கத் துறையின் இத்தகைய தேவையற்ற நடவடிக்கைகளைத் தவிர்த்தால் இந்தியாவிலிருந்து மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியை உயர்த்தும் முயற்சிகள் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார். விவோ நிறுவனத் தயாரிப்புகளை தடுத்து நிறுத்தி வைத்திருப்பது மற்ற சீன கைப்பேசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இத்தகைய நிலை தொடர்ந்தால் 2026ம் ஆண்டு மார்ச்சுக்குள் 120 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்கிற இந்தியாவின் இலக்குக்கே ஆபத்து என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Spread the love