October 3, 2022

விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம்

புது தில்லி, செப்.16

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாவது:

6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1,080மு2,404 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மீடியாடெக் டைமண்ட்சிட்டி 900 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த விவோ போன்.

64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

கேம் பூஸ்ட் மோட், லிக்விட் கூலிங் சிஸ்டம் மற்றும் 4டி கேம் வைப்ரேசனுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதேபோல் 8ஜிபி/12ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது அசத்தலான விவோ வி25 5ஜி போன். புதிய விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது.12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.31,999-ஆக உள்ளது.

Spread the love