September 27, 2022

விவோ டி1 5ஜி புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்

புது தில்லி, செப்.20

விவோ நிறுவனம் முற்றிலும் புதிய லிமிடெட் எடிசன் டி1 5ஜி ஸ்மார்ட்போனினை சில்கி வைட் எனும் வண்ணத்தில் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

செப்.23ல் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது விவோ நிறுவனம் தனது டி1 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச், 120ஹெர்ட்ஸ்+ எப்எச்டி டிஸ்ப்ளே, 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் டெப்த் கேமரா, 16 எம்பி செல்பி கேமரா கொண்டிருக்கிறது.

இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, பண்டச் ஒஎஸ் 12, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

முன்னதாக விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் ரெயின்போ ஃபேண்டசி மற்றும் ஸ்டார்லைட் பிளாக் என இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. விவோ டி1 5ஜி அனைத்து நிறங்களிலும் ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் சில்கி வைட் நிற வேரியண்ட் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ ஸ்டோர் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.15,990 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.16,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Spread the love