February 3, 2023

விவோ ஒய்75 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

புது தில்லி, டிச.22

விவோ நிறுவனம் விவோ ஒய் 75 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதாவது ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்பட்ட விவோ இந்த ஸ்மார்ட்போனுக்கு தற்போது ரூ.1000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும்.

இதன் சிறப்பம்சங்களாவது:

6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1080×2400 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டு இந்த விவோ Y75 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது.

கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனில் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதாவது இந்த விவோ போன் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 44எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது. 4050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது.

4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், டூயல் சிம் மற்றும் டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 172 கிராம்.

Spread the love