December 9, 2022

விற்பனையில் புது மைல்கல் எட்டியது சோனி பிளே ஸ்டேசன் 5

மும்பை, நவ.3

சோனி நிறுவனம் பிளே ஸ்டேசன் 5 25 மில்லியனுக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த காலாண்டில் மட்டும் 3.3 மில்லியன் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 2022 நிதியாண்டில் மட்டும் 18 மில்லியன் யூனிட்கள் விற்பனையாகும் என சோனி நிறுவனம் நிறுவனம் கணித்துள்ளது. மேலும், இந்த நிதியாண்டின் அரையாண்டு வரையில் சோனி நிறுவனம் 5.7 மில்லியன் பிளே ஸ்டேசன் 5 யூனிட்களையே விற்பனை செய்து இருக்கிறது. அந்த வகையில் மீதமுள்ள காலக்கட்டத்தில் விற்பனை இலக்கை சோனி எட்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கடந்த ஆண்டில் இருந்தே சோனி நிறுவனம் இந்த விற்பனையில் அதிக வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. அந்த வகையில் வருவாய் மட்டும் 12 சதம் அதிகரித்து இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் இதன் விலை உயர்வு காரணமாகவே வருவாய் அதிகரித்து இருக்கிறது. மேலும், வருவாய் அதிகரித்த போதிலும் லாபம் 49 சதம் சரிவடைந்து இருக்கிறது. கேம் தயாரிப்பு நிறுவனமான பன்ஜியை சோனி கைப்பற்றியதே லாபம் சரிய காரணமாக கூறப்படுகிறது. பன்ஜி நிறுவனம் தான் ஹாலோ டிரையலஜியை உருவாக்கியது. கடந்த ஆண்டு மட்டும் சோனி நிறுவனம் 11.5 மில்லியன் பிளே ஸ்டேசன் 5 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விற்பனை முந்தைய ஆண்டை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Spread the love