December 8, 2022

விரைவில் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்ய ஓலா நிறுவனம் திட்டம்

பெங்களூரு, நவ.7

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு உடனடி டெலிவரியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து விரிவான செய்தியாவது: அடுத்த வாரத்தில் இருந்து புக்கிங் கொடுக்கப்பட்ட அதே நாள் அல்லது இரண்டு நாட்களுக்குள் டெலிவரி கொடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதே நாளில் டெலிவரி கொடுப்பது என்பது குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் அதன் உற்பத்தி ஆலையில் இருந்து 1 லட்சமாவது யூனிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரிக்காக வெளியேற்றப்பட்டது. இதுமட்டுமில்லைங்க, கடந்த அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 20 ஆயிரம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நிறுவனம் தற்போது எஸ்1, எஸ்1 ப்ரோ மற்றும் புதுமுக அறிமுகமான எஸ்1 ஏர் ஆகிய மூன்று விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் மிக மிக மலிவு விலைக் கொண்டதாக எஸ்1 ஏர் மாடல் இருக்கின்றது. ரூ. 84,999 இதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதேபோல் எஸ்1 ரூ. 99,999க்கும், எஸ்1 ப்ரோ ரூ. 1,39,999க்கும் விற்கப்பட்டு வருகின்றது. தற்போது எஸ்1 ஏர் எலெகட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு ரிசர்வேசன் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கான விற்பனை வரும் 2023ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love