February 3, 2023

விரைவில் வெளியாகும் ரெட்மி 12சி ஸ்மார்ட்போன்

புது தில்லி, டிச.7

ரெட்மி நிறுவனம் புதிய எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது குறித்த விரிவான செய்தியாவது:

2212ஏஆர்என்சி4எல் எனும் மாடல் நம்பர் கொண்ட புது ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் ஐஎம்ஐஇ டேட்டாபேஸ் தளத்தில் ரெட்மி 12சி பெயரில் இடம்பெற்று இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனிற்கு எப்சிசி ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டது. அந்த வகையில் ரெட்மி 12சி மாடல் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய ரெட்மி 12சி மாடலில் 6.7 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 2 ஜிபி, 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம், 32 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி ஆப்சன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

எண்ட்ரி லெவல் மாடல் என்பதால், ரெட்மி 12சி மாடல் முதற்கட்டமாக சர்வதேச சந்தையிலும், அதன் பின் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மியூ 13 ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி வேரியண்ட் விவரங்களும் ஐஎம்இஐ டேட்டாபேஸ் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனும் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இது ரெட்மி நோட் 10 ப்ரோ மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்சனாக இருக்கும் என கூறப்படுகிறது.

Spread the love