January 21, 2023

விரைவில் விவோ எக்ஸ் 90 ஸ்மார்ட்போன் அறிமுகம்

புது தில்லி, டிச.10

விவோ நிறுவனம் எக்ஸ் 90 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாவது:

விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போனில் எச்டிஆர்10+ ஆதரவுடன் கூடிய 6.78 இன்ச் அமோல்ட் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ர´ங் ரேட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 300 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகித ஆதரவை கொண்டிருக்கிறது.

விவோ எக்ஸ் 90 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 9200 சிப் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 120 வாட்ஸ் வயர்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4810 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஏபிடிஎக்ஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவுக்கான ஆதரவுடன் கூடிய ஸ்பீக்கர்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

இதன் கேமரா பொறுத்தவரை டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஓஐஎஸ் மற்றும் இஐஎஸ் ஆதரவுடன் கூடிய 50 எம்பி ஐஎம்எக்ஸ்866 முதன்மை சென்சார், 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 12 எம்பி போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 12 எம்பி அல்ட்ராவைட் சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா இருக்கிறது.

Spread the love