November 29, 2022

விரைவில் விற்பனைக்கு வரும் சோனி பிஎஸ்5 ஸ்லிம்

மும்பை, நவ.8

சோனி நிறுவனம் பிளே ஸ்டேசன் (பிஎஸ்5) கேமிங் கன்சோலை அறிமுகம் செய்து சில ஆண்டுகள் கடந்துவிட்டது.

இந் நிலையில், சோனி தனது பிஎஸ்5 மாடலின் புது வெர்சனை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புது வெர்சன் சோனி பிஎஸ்5 ஸ்லிம் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சோனி பிஎஸ்5 ஸ்லிம் மாடல் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்த மாடல் மிக மெல்லியதாகவும், குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. 2023 வாக்கில் சோனி பிஎஸ்5 ஸ்லிம் அறிமுகமாகும் என்ற தகவல் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

புது வெர்சனில் டிஸ்க் டிரைவ் வழங்கப்படும் என தெரிகிறது. சோனி பிஎஸ்5 அறிமுகமாகி சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இதற்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகிறது. பயனர்கள் இன்றும் இந்த மாடலை வாங்க முற்பட்டு வருகின்றனர். அண்மையில் தான் சோனி பிஎஸ்5 மாடலின் விலை ஐரோப்பா, லண்டன், ஜப்பான் என உலகின் பல்வேறு நாடுகளில் உயர்த்தப்பட்டது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலைவாசி மாற்றம் என பல்வேறு காரணங்களே விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love