October 3, 2022

விரைவில் வருகிறது ஜியோபுக் லேப்டாப்

மும்பை, பிப்.8

ஆப்பிளின் மேக்புக் போலவே ஜியோபுக் என்ற பெயரில் ரிலையன்ஸ் ஜியோ-வின் முதல் லேப்டாப்-ஐ திட்டமிட்டதற்கு முன்னதாகவே அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது ஆகாஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிர்வாகம்.

இது குறித்து விரிவான செய்தியாவது:

நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் லேப்டாப் கிடைக்க வேண்டும் என்ற மிக முக்கியமான திட்டத்துடன் ரிலையன்ஸ் ஜியோ, ஜியோபுக் என்னும் லேப்டாப்-ஐ அறிமுகம் செய்யப் பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்ட நிலையில் தற்போது ஜியோபுக்-க்கான வன்பொருள் ஒப்புதல் கிடைத்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி ஜியோபுக் விண்டோஸ் 10 மென்பொருள் உடன் விற்பனைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜியோபுக்-ன் விலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஏஆர்எம் நிறுவனத்தின் பிராசசர் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சீனாவின் எம்டோர் டிஜிட்டல் டெக்னாலஜி நிறுவனம் புயூனி பிராசர் கொண்ட லேப்டாப்-ஐ தயாரிப்பதில் முன்னோடியாக விளங்கும் நிலையில், ஜியோ இந்நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து இந்தியாவில் மலிவு விலையில் ஜியோபுக்-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

ஆகாஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் மற்றும் மென்பொருள் சேவை பிரிவில் மட்டும் அல்லாமல், வன்பொருள் சேவை பிரிவிலும் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் படி ஏற்கனவே ஜியோ போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நிலையில், தற்போது ஜியோபுக், அடுத்தாக டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் டிவி-ஐ அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் டிவி சீன நிறுவனங்களை விடவும் விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love