October 2, 2022

விரைவில் புதிய பங்கு வெளியிட
டாடா பிளே முயற்சி

புது தில்லி, செப்.5

டாடா குழுமத்தைச் சேர்ந்த, சாட்டிலைட் டெலிவிசன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள, டாடா பிளே, விரைவில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் இந்நிறுவனம் டாடா ஸ்கை என அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்நிறுவனம், இம்மாத இறுதியில், பங்குவெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பிக்க உள்ளது. இது குறித்து மேலும் தெரியவந்துள்ளதாவது: டாடா ஸ்கை நிறுவனம், அதன் சேவைகளை, கடந்த 2004ல் வழங்கத் துவங்கியது. மேலும், இது ஒரு கூட்டு வணிகம். இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்காக வருவதற்கான பணிகள் கடந்த ஆண்டே துவங்கி விட்டது. ஆனால், நிறுவனம் சில மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியதால், முயற்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. சந்தையும் ஏற்ற – இறக்கங்களுடன் இருந்தது. தற்போது மீண்டும் பங்கு வெளியீட்டுக்கான முயற்சிகள் துவங்கப்பட்டு உள்ளன.

Spread the love