September 27, 2022

விரைவில் டொயோட்டா கிளான்சா சிஎன்ஜி அறிமுகம்

புது தில்லி, செப்.20

டொயோட்டா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் கிளான்சா மாடலின் சிஎன்ஜி வேரியண்டை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:

புதிய கிளான்சா சிஎன்ஜி மாடலில் 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 77 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் என தெரிகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் கிலான்சா ஸ்டாண்டர்டு மாடலில் இதே என்ஜின் 90ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. டொயோட்டா தனது கிளான்சா மாடல் லிட்ருக்கு 25 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என தெரிகிறது. மேலும் இந்த வேரியண்ட் மேனுவல் டிரான்ஸ்மிசன் ஆப்சனில் மட்டுமே கிடைக்கும்.

டொயோட்டா கிளான்சா சிஎன்ஜி ஆப்சன் ஜி, எஸ் மற்றும் வி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. டாப் எண்ட் மாடலான வி வேரியண்டில் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 9 இன்ச் தொடுதிரை வசதி, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மற்றும் ஆறு ஏர்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மற்ற சிஎன்ஜி கார்களை போன்றே கிளான்சா விலை அதன் பெட்ரோல் மாடலை விட அதிகமாகவே இருக்கும். தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இதன் விலை அதன் ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ.75 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்சா மாடல் டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் ஐ20, ஹோண்டா ஜாஸ் மற்றும் மாருதி சுசுகி பலேனோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Spread the love