September 27, 2022

விரைவில் சந்தையில் வெளியாகும்
எலெக்ட்ரிக் ஜீப் எஸ்யுவி

புது தில்லி, செப்.6

சர்வதேச சந்தையில் ஜீப் எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிடுவது குறித்த அறிவிப்பு செப்.8 ஆம் தேதி வெளியாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 8 ஆம் தேதி நிகழ்வை ஜீப் நிறுவனம் 4எக்ஸ்இ தினம் என அழைக்கிறது. முதல் எலெக்ட்ரிக் காரை இதுவரை அறிமுகம் செய்யாத நிலையில், ஜீப் நிறுவனம் தற்போது தேர்வு செய்யப்பட்ட மாடல்களின் ஹைப்ரிட் வெர்சனை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல்கள் இ ஹைப்ரிட் மற்றும் 4எக்ஸ் இ பிராண்டுகளின் கீழ் விற்பனையாகி வருகின்றன.

முன்னதாக ஜீப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தின் ரெண்டர் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது. இந்த கார்களின் ப்ரோடக்?­ன் வெர்சன் 2023 ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஜீப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் ஸ்டெலாண்டிஸ் றீவீஸிபு பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. இதே பிளாட்பார்மில் இந்த நிறுவனத்தின் மற்ற கார் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி வருகின்றன. முதல் முறையாக 2021 மார்ச் மாத வாக்கில் ஜீப் நிறுவனம் மேக்னெடோ கான்செப்ட் எஸ்யுவி-யை அறிமுகம் செய்து இருந்தது. இந்த மாடலில் 285 பிஎஸ் பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் இ மோட்டார், 70 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரிகள் வழங்கப்பட்டு இருந்தது.

Spread the love