December 9, 2022

விரைவில் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்பைக்
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்கிறது

ஓசூர், நவ.18

எலெக்ட்ரிக் கார் தவிர புதிதாக ஸ்போர்ட்பைக் மாடலை ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: புதிய ஒலா எலெக்ட்ரிக் பைக் அல்ட்ராவைலட் எப்77 மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் ஸ்போர்ட் ரைடிங் ஸ்டைல் கொண்ட எலெக்ட்ரிக் பைக்-ஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் தான் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. ஒலா எஸ்1 ஏர் பெயரில் அறிமுகமான புது ஸ்கூட்டர் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அல்ட்ராவைலட் எப்77 எலெக்ட்ரிக் ஸ்போர்ட்-பைக் மாடலுக்கு போட்டியாக புது எலெக்ட்ரிக் ஸ்போர்ட்-பைக்கை அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ஒலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் களமிறங்க விருப்பம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Spread the love