October 4, 2022

விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன்

சென்னை, செப்.8

கடந்த ஜூன் மாதம் உலக சந்தைகளில் அறிமுகமான ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் இந்தியாவில் அறிமுகமானால் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாவது:

6.5 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது.மேலும் 120யஹர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 88.7% ஸ்கிரீன் டு பாடி விகிதத்தைக் கொண்டிருக்கிறது.

ஆக்டோ கோர் யுனிசோக் டி612 பிராஸசர் வசதியைக் கொண்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது. ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

வைஃபை, ப்ளூடூத் 5.0, மைக்ரோ யூஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். அதேபோல் இந்த போனின் எடை 182 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ரூ.7500-க்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டார்க் ப்ளூ மற்றும் மின்ட் க்ரீன் நிறங்களில் இந்த புதிய ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love