October 4, 2022

விரைவில் இந்திய சந்தைக்கு வரும்
ஒன்பிளஸ் நார்டு வாட்ச்

சென்னை, செப்.20

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி பிரைம் புளூ எடிசன் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந் நிலையில் ஒன்பிளஸ் நார்டு வாட்ச் மாடலையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் அமோல்ட் டிஸ்ப்¼ள, பல்வேறு சென்சார்கள், குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

புதிய ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. புதிய நார்டு வாட்ச் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நார்டு சீரிஸ் என்பதால் இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. புதிய நார்டு வாட்ச் மாடலுக்காக பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அதிக வாட்ச் பேஸ்கள், டிஸ்ப்ளே, ஸ்போர்ட்ஸ் மோட்கள் பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்பட இருக்கிறது. இது போன்று ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் கொண்ட டீசர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமேசான் வலைதளத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி சிறப்பு விற்பனை துவங்க இருக்கிறது. அந்த வகையில் இந்த வாட்ச் சிறப்பு விற்பனையின் போது அறிமுகமாகாது என்றே தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஒன்பிளஸ் நார்டு வாட்ச் ஜிபிஎஸ், பல்வேறு வாட்ச் பேஸ்கள், ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை டிராக் செய்யும் சென்சார்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Spread the love