January 23, 2023

விரைவில் இந்தியா வரும் யமஹா எப்இசட்-எக்ஸ்

சென்னை, ஜன.19

யமஹா நிறுவனம் 2023 எப்இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புது எப்இசட்-எக்ஸ் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புது மாடலின் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது.

இத்துடன் புது விண்ட்ஸ்கிரீன், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டியுபுலர் ஸ்டீல் ஃபிரேம் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் ஹை-மவுண்ட் ஃபெண்டர் வழங்கப்படுகிறது. இதுதவிர 2023 எப்இசட்-எக்ஸ் மாடல் புது வண்ணங்களில் கிடைக்கும் என்றும் தெரிகிறது. ஸ்பை படங்களில் உள்ள மாடல் கோல்டன் நிற அலாய் வீல்கள், ஆரஞ்சு நிற பாடி வொர்க் கொண்டிருக்கிறது. இதே போன்ற கோல்டு நிற ரிம்கள் எப்இசட்எஸ் 25 போன்ற மாடல்களிலும் யமஹா ஏற்கனவே வழங்கி இருக்கிறது.

மேலும், இவற்றுடன் புதிய யமஹா இந்த மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. அந்த வகையில், இந்த பைக் 149சிசி, ஏர் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கும். இது 12.4 ஹெச்பி பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. வரும் வாரங்களில் புதிய யமஹா எப்இசட்-எக்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love