December 9, 2022

விரைவில் இந்தியா வரும் சியோமி 13 ஸ்மார்ட்போன்

புது தில்லி, நவ.15

சியோமி 13 மாடல் சீன சந்தையிலேயே அடுத்த மாதம் தான் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந் நிலையில், சியோமி 13 மாடல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

சியோமி 13 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது.

தற்போது பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கும் சியோமி 13 மாடல் 2210132ஜி எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

முதற்கட்டமாக சியோமி 13 மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அதன் பின் இந்தியா வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் சியோமி 13 ஸ்மார்ட்போன் இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6.2 இன்ச் எப்எச்டி+ அமோல்ட் டிஸ்ப்ளே, 1.5கே ரெசல்யூசன், 50 எம்பி பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மியூ 14 ஒஎஸ் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதுதவிர இணையத்தில் வெளியான ரெண்டர்களின்படி சியோமி 13 ஸ்மார்ட்போன் ஃபிளாட் சர்ஃபேஸ், கூர்மையான எட்ஜ் மற்றும் மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்றும் இதன் மேல்புறத்தில் பன்ச் ஹோல் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பெட்டி போன்ற தோற்றம் பெறும் வகையில், அதன் ஓரங்களில் வளந்த டிசைனுக்கு மாற்றாக ஃபிளாட் சர்ஃபேஸ் காணப்படுகிறது.

Spread the love