October 3, 2022

விரைவில் இந்தியா வரும் கவாசகி டபிள்யு சீரிஸ்

சென்னை, செப்.10

கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டபிள்யு சீரிஸ் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்யயவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கவாசகி நிறுவனம் டபிள்யு 175 ரெட்ரோ ஸ்டைல் ரோட்ஸ்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கவாசகி இந்தியா நிறுவனம் டபிள்யு 175 மாடலை இந்திய சந்தையில் சோதனை செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் 2020 வாக்கில் இருந்தே கவாசகி புதிய மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய டபிள்யு 175 இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

இந்தோனேசிய சந்தையில் கவாசகி டபிள்யு 175 ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த மாடலில் 177சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 13 பிஎஸ் பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜினை கொண்டிருக்கும். இதன் காரணமாக செயல்திறன் அளவுகளில் மாற்றம் ஏற்படலாம். இந்த மாடலில் டெலிஸ்கோபிக் போர்க், டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கவசாகியின் டபிள்யு 800 ரெட்ரோ ஸ்டைல் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். இதில் ஹாலோஜன் ஹெட்லைட், டியர்டிராப் வடிவ பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது.

Spread the love