September 27, 2022

விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டடம்
கட்டும் பணிகளுக்கு செப்.15ல் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

விருதுநகர், செப்.13

விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் புதிய ஆட்சியர் அலுவலக கட்டடம் கட்டும் பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 15.09.2022 அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்கவுள்ளார்கள்.

அதன்படி விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டடம் ரூ.70.57 கோடி மதிப்பில் ஆறு தளங்களுடன் மொத்தம் 202496 ச.அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இந்த புதிய கட்டடத்திற்கான பணிளை முதல்வர் 15.09.2022 அன்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள் நாடளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Spread the love