September 27, 2022

விருதுநகரில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான
ஆலோசனைக் கூட்டம்: ஆட்சியர் தலைமை

விருதுநகர், பிப்.8

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022 -ஐ முன்னிட்டு வட்டார தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்கள் உடனான வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் தேர்தல் பார்வையாளர்/தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை இயக்குநர் எஸ்.பாலசந்தர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.மனோகர் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளுக்கு 19.02.2022 அன்று வாக்குப்பதிவும் 22.02.2022 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

மேலும் மறைமுக தேர்தல்கள் மூலம் மாநகாட்சிகளுக்கான மேயர் துணை மேயர் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்ட நாள்: 04.03.2022 அன்று நடைபெறுகிறது.

இதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு/வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தபால் ஓட்டு தொடர்பான பணிகளை முறையாக மேற்கொள்ளவும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றி தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஒத்துழைப்போடு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர்ஃதமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை இயக்குநர் ஆகியோர்கள் வழங்கினனர்.

Spread the love