February 3, 2023

விமான போக்குவரத்து பாதுகாப்புதரவரிசை பட்டியல்
இந்தியாவுக்கு 48வது இடத்து முன்னேற்றம்

புது தில்லி, டிச.5

உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை பட்டியலை சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், விமான பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா 48-வது இடத்தில் உள்ளது. முன்னதாக, இந்த தரவரிசை பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் 2வது இடத்திலும், தென் கொரியா 3-வது இடத்திலும் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக 49வது இடத்தில் சீனா உள்ளது. இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் அதிகாரி தெரிவிக்கையில்,

நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றோம். தற்போது பெற்றிருக்கும் இந்த புதிய நிலையை தக்கவைத்துக்கொள்வதில் சவால் உள்ளது. விமான போக்குவரத்து இயக்குனரகம் திறமையான அதிகாரிகளைக் கொண்டுள்ளது. எங்களுக்கு சரியான ஆதரவை வழங்கினால், நாங்கள் மேலும் மேம்படுத்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம். தரவரிசை பட்டியலில் 102வது இடத்தில் இருந்து 48வது இடத்திற்கு முன்னேறியிருப்பது மிகப்பெரிய சாதனையாகும் என தெரிவித்தார்.

Spread the love