January 26, 2023

விமான பயணிகளின் வசதிக்காக
மெட்ரோ ரயில் நிலையத்தில் செக் இன் வசதி அறிமுகம்

சென்னை, ஜன.20

விமான பயணிகளின் வசதிக்காக சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பைகளை சோதனை செய்து அனுப்பும் செக் இன் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: தேர்ந்தெடுக்கப்பட்ட சில மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செக்-இன் வசதி எங்கு அறிமுகப்படுத்தப்படும் என்பதை இறுதி செய்வதற்கு முன்பு மெட்ரோ ரெயில் நிலையங்களில் அதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

மேலும், இந்திய விமான நிலைய ஆணையம், விமான நிறுவனங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளன. மெட்ரோ ரயில் நிலையங்களில் செக்-இன் செய்யப்படும் பைகள் சோதனைக்கு பிறகு மெட்ரோ ரயில் மூலம் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இதன்மூலம் காலதாமதம் இல்லாமல் பைகளை அனுப்ப முடியும் என தெரிவித்துள்ளது. இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றன. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் சோதனைக்கு பிறகு இந்த வசதி பற்றிய அறிவிப்பு வருகிற ஏப்ரல் 14ந் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு இணையதளத்தில் மெட்ரோ அல்லது விமான நிலையத்திற்கான செக் இன் விருப்பத்தை சேர்ப்பது குறித்தும் இண்டிகோ விமான நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

Spread the love