October 3, 2022

விமான நிறுவனங்களின் மொத்த நஷ்டம் ரூ.17 ஆயிரம் கோடியாக இருக்கும்

புது தில்லி, செப்.8

நாட்டில் செயல்பட்டு வரும் விமான சேவை நிறுவனங்களின் மொத்த நஷ்டம் நடப்பு நிதியாண்டில் ரூ.17,000 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் நிதி ஆண்டில் விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் ரூ.15,000 கோடியிலிருந்து ரூ.17,000 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான சேவை நிறுவனங்களில் நடைமுறைச் செயலில் 45 சதமாக இருக்கும் விமான எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. விமான எரிபொருள் விலை அதிகரித்ததே விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் அதிகரிக்க காரணம் என புகார் எழுந்துள்ளது. விமான சேவை நிறுவனங்கள் நடைமுறைச் செலவினத்தில் 35 சதத்திலிருந்து 50 சதம் அளவுக்கு டாலரில் செலுத்த வேண்டியுள்ளது. ரூபாய் கணக்கில் டாலரின் மாற்றுமதிப்பு உயர்வதாலும் விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் அதிகரிக்கிறது.

மேலும், நடப்பு நிதி ஆண்டில் விமான சேவை நிறுவனங்களின் மொத்த கடனளவும் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இண்டிகோ நிறுவனம் ரூ.1,064 கோடியும், ஸ்பைஸ்ஜெட் ரூ.789 கோடியும் நஷ்டம் அடைந்துள்ளன.

Spread the love