November 29, 2022

விமானப் பயணத்தின் போது முகக்கவசம் கட்டாயம் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

புது தில்லி, நவ.17

விமானப் பயணத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 – 2021ம் ஆண்டுகளில் உலகமே முடங்கியது. அப்போது, நம் நாட்டில் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின், கொரோனா பரவல் வெகுவாக குறைந்து தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.

கொரோனா பரவல் முற்றிலும் கட்டுக்குள் வந்துள்ளதால், விமானப் பயணத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றஉத்தரவு வாபஸ் பெறப்படுகிறது.

ஆனால், முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படும். இதை அணியாதவர்களுக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love