October 4, 2022

விப்ரோவை பின்னுக்கு தள்ளி
மூன்றாம் இடத்தை பிடித்த எச்சிஎல்

பெங்களூரு, செப்.3

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் சந்தை மதிப்பின் அடிப்படையில் நான்காவது இடத்தில் இருந்த ´வ் நாடாரின் எச்சிஎல் நிறுவனம் விப்ரோவின் சந்தை மதிப்பு சரிவால் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாகவே விப்ரோவை விட எச்.சி.எல்., அதிக வருவாய் ஈட்டி வருகிறது.

இது குறித்து விரிவான செய்தியாவது: தற்போது விப்ரோவின் ரூ.2.24 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் ஒப்பிடும் போது எச்சிஎல் சந்தை மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடியாக உள்ளது. எச்சிஎல் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்ததால் இந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. விப்ரோவை விட எச்சிஎல் பங்குகள் குறைந்த அளவில் சரிவைச் சந்தித்ததால் விப்ரோ பின் தங்கியது. ஐடி நிறுவனப் பங்குகள் அனைத்தும் இந்தாண்டு கடுமையாகச் சரிவைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவில் கடும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற கணிப்புகளால் இந்த சரிவு காணப்படுகிறது.

80களில் மென்பொருள் துறையில் நுழைந்த விப்ரோவை விட எச்சிஎல் இளைய நிறுவனம். ஊழியர்கள் எண்ணிக்கையிலும் விப்ரோவை விட சற்றே குறைந்தது தான் எச்சிஎல். விப்ரோவில் 2.5 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். எச்.சி.எல்லில் 2.1 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

Spread the love