December 8, 2022

விஜயவாடா-ஷார்ஜா இடையே விமான சேவை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கத் திட்டம்

புது தில்லி, அக்.28

இந்திய விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்போது தனது புதிய சேவையாக விஜயவாடாவில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானம் இயக்க போவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவிலிருந்து ஷார்ஜாவுக்கு பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே விமானங்களை இயக்கி வரும் நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விஜயவாடாவில் இருந்து வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் ஷார்ஜாவுக்கு சேவையை ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதற்கான டிக்கெட் விலையும் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை அதிகாரி அலோக் சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘விஜயவாடா மற்றும் ஷார்ஜாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முதல் சர்வதேச சேவையை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான சேவை மிகவும் மந்தமாக இருந்த நிலையில் அந்த கடினமான ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் விமான நிறுவனங்கள் புத்துயிர் பெற்று வருகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கிடையிலான விமான போக்குவரத்து ஒரு மிகப்பெரிய மீட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்’ என அலோக் சிங் கூறினார்.

கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முந்திய நிலைக்கு விமான சேவை திரும்பி உள்ளதால் புதிய சேவைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறோம். அந்த வகையில் துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ் பகுதிகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு வசதியாக ஷார்ஜாவுக்கு நேரடி விமானத்தை சரியான நேரத்தில் நாங்கள் இயக்குவதில் பெருமை அடைகிறோம் என்று அலோக் சிங் கூறியுள்ளார்.

Spread the love