October 4, 2022

விசைத்தறி நெசவாளர்களுக்கு 50 சத மானியத்துடன் மின்னணு பலகை வழங்கும் திட்டம்: ஆட்சியர் தகவல்

நாமக்கல், செப்.13

நாமக்கல் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பாவது:

விசைத்தறி நெசவாளர்களின் ஜவுளிகள் உற்பத்தி திறனை அதிகரிக்க கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் 28.04.2022 அன்று சட்டபேரவையில் தெரிவித்தவாறு தமிழ்நாடு அரசினால் வழங்கப்படும் இலவச மின்சாரம் / மான்ய விலையில் மின்சாரம் பெறும் சொந்தமாக விசைத்தறிகள் உள்ள கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அமைப்பு சாராத விசைத்தறி நெசவாளர்களுக்கு 50 விழுக்காடு மான்யத்தில் அதிகபட்சம் 5 விசைத்தறிகளுக்கு (2 விசைத்தறி வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை) மின்னணு பலகை (எலெக்ட்ரிக் பேனல் போர்டு) வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்கள் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம்,ஈகாட்டூர், எலந்தகுட்டை அஞ்சல் குமாரபாளையம் வட்டம், நாமக்கல் மாவட்டம் என்கிற முகவரியில் விண்ணப்பத்தினை பெற்று ஆதார் அட்டை மின் பயனீட்டாளர் அட்டை மற்றும் வாடகை கட்டிடத்தில் இயங்கும் விசைத்தறிகளுக்கு கட்டிட உரிமையாளருடன் மேற்கொண்ட வாடகை ஒப்பந்தத்துடன் 15.09.2022 தேதிக்குள் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் ஈகாட்டூர் முகவரியில் விண்ணப்பத்தினை சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக்கொள்கிறார்.

Spread the love