October 4, 2022

வாரத்துக்கு 250 விமான சேவைகள் இயக்க ஆகாசா ஏர் நிறுவனம் திட்டம்

மும்பை, செப்.19

அண்மையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஆகாசா ஏர் நிறுவனம், வாரந்தோறும் 250-க்கு மேற்பட்ட விமான சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆகாசா ஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரும் அக்டோபர் மாத்தின் இரண்டாவது வாரத்துக்குள், 9 உள்நாட்டு விமான வழித்தடத்தில் வாரந்தோறும் 250க்கும் மேற்பட்ட விமானப் போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்¼ளாம். அக்டோபர் 7ம் தேதி முதல், பெங்களூருக்கும் அகமதாபாதுக்கும் இடையே விமான சேவையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் 5வதாக ஒரு விமானம் நிறுவனத்தின் பணியில் இணைக்கப்படவுள்ளது. அந்த விமானம் சேர்க்கப்படுவது, வாரத்துக்கு 250-க்கும் மேற்பட்ட விமானப் போக்குவரத்து சேவைகளை அளிக்கும் இலக்கை அடையவதற்கு வழிவகை செய்யும் என்று அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை – பெங்களூரு நகரங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்து சேவையை நிறுவனம் கடந்த வாரம் முதல் தொடக்கியது. அந்த நகரங்களுக்கு இடையே தினமும் 2 விமானங்கள் இயக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது. நாடு முழுவதும் எங்களது விமானப் போக்குவரத்து சேவைகளை படிப்படியாகவும், அதே நேரத்தில் மிக விரைவாகவும் விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த புதிய சேவைகள் அறிமுகப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love