February 3, 2023

வாடிப்பட்டி பகுதியில் பயனாளிகளுக்கு
அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்

மதுரை, நவ.23

வாடிப்பட்டி வட்டம், வெள்ளையம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக 1,219 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 274 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, அமைச்சர் பேசியததாவது:-

வாடிப்பட்டி வட்டம், வெள்ளையம்பட்டி கிராமத்தில் இன்றைய தினம் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்டுகின்றது. இம்முகாமில் 1,219 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடியே 6 இலட்சத்து 65 ஆயிரத்து 274 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டுள்ளன. 2006 -2011ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான அரசில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக சேவை செய்ய இப்பகுதி மக்கள் எனக்கு வாய்ப்பு வழங்கினீர்கள். அந்த வகையில் இப்பகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. தற்போது தமிழக முதல்வரின் தலைமையிலான அரசில் அமைச்சராக மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ”

அமைச்சர் என்பது பதவியல்ல, எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்று உணர்ந்து தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்தும், மதுரை மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசினார். முன்னதாக அமைச்சர் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக முடுவார்பட்டியில் புதிய கால்நடை மருந்தகம் கட்டடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

Spread the love