October 3, 2022

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான
கணினி முறை ஒதுக்கீடு
ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

மதுரை, பிப்.8

மதுரை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தலைமையில், மதுரை மாவட்டத்திற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர் / தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மேலாண்மை இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், தேர்தல் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாம் கட்ட கணினி முறை ஒதுக்கீடு நடைபெற்றது.

மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்தல் வாக்குப்பதிவு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாம் கட்ட கணினி முறை ஒதுக்கீடு இன்றைய தினம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் தலைமையில், மதுரை மாவட்டத்திற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர் அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.மேலும்இ 10.02.2022-ஆம் தேதி சம்மந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் அந்தந்த அலுவலகத்தில் இணையதள வாயிலாக மூன்றாம் கட்ட கணினி முறை ஒதுக்கீடு நடத்தப்பட்டு வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களில்இ வேட்பாளர்கள் குறித்த வாக்கு சீட்டு பொருத்தும் பணி நடைபெறும்.

இந்த நிகழ்வின் போது, மதுரை மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) எஸ்.சதீஷ் பாபு, உட்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Spread the love