December 8, 2022

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் படிவத்தினை
மாணவிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்

நாமக்கல், நவ.10

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் படிவத்தினை மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங் வழங்கினார்.

09.11.2022 முதல் 08.12.2022 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது. இப்பணியின்போது, 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

இதன் அடிப்படையில் பள்ளியில் பயிலும் 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்த மாணவ, மாணவிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் படிவத்தினை மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். பின்னர் மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர் 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்த மாணவிகள் மற்றும் தங்களது சகோதரர், சகோதிரிகள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், தங்களது பெற்றோர்கள், உறவினர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து எடுத்துக்கூற வேண்டும் எனவும், தேர்தல் நடைமுறைகள், வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.

Spread the love