February 3, 2023

வாகன சார்ஜிங் வசதிக்காக ரூபே கார்டு பார்டம் நிறுவனம் அறிமுகம்

புது தில்லி, டிச.31

பார்டம் சார்ஜ் மற்றும் டிரைவ் என்ற சார்ஜிங் நிலைய நிறுவனம், பைன் லேப்ஸ் எனும் நிதி நிறுவனத்துடன் இணைந்து, வாகன சார்ஜிங் வசதிக்காக புதிய ரூபே ப்ரீபெய்டு’ கார்டை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த கார்டை, இந்தியா முழுதும் உள்ள அனைத்து சார்ஜிங் நிலையங்களிலும், ஜனவரி 1ம் தேதி முதல் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பார்டம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அவதேஷ் குமார் ஜா தெரிவித்துள்ளதாவது: மின்சார வாகன வாடிக்கையாளர்கள், இந்த ப்ரீபெய்டு கார்டை சார்ஜிங் நிலையங்களில் மட்டுமல்லாமல் மால்கள், கடைகள், உணவகங்கள் என, பல்வேறு பொது இடங்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இந்த கட்டண முறை மிகச் சிறந்த, சவுகரியமான சார்ஜிங் அனுபவத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love