February 3, 2023

வாகனங்களின் விலையை உயர்த்துகிறது ஆடி நிறுவனம்

சென்னை, டிச.8

ஆடி இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 1.7 சதம் வரை உயர்த்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: உற்பத்தி மற்றும் உபகரணங்களின் செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையே ஆடி இம்முறை விலை உயர்வுக்கும் காரணமாக தெரிவித்து இருக்கிறது. விலை உயர்வு 2023 ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வருகிறது. மேலும், இந்த ஆண்டில் மட்டும் ஆடி நிறுவனம் மூன்று முறை தனது கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.

2022 ஜனவரி மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களில் ஆடி கார்களின் விலை அதிகபட்சம் 3 சதம் வரை உயர்த்தப்பட்டது. பின் பண்டிகை காலத்தை ஒட்டி செப்டம்பர் மாத வாக்கில் கார்களின் விலை 2.4 சதம் உயர்த்தப்பட்டது.

மேலும், ஆடி இந்தியாவின் வியாபார நுனுக்கம் ஒரு மாடலின் லாபம் மற்றும் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே ஆகும். உற்பத்தி மற்றும் நிர்வாக செலவீனங்கள் அதிகரிப்பதாலேயே விலை மாற்றம் செய்யப்படுகிறது.” என ஆடி இந்தியா தலைவர் பல்பிர் சிங் திலான் தெரிவித்துள்ளார். இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் தற்போது ஆடி ஏ4, ஆடி ஏ6, ஆடி ஏ8எல், ஆடி கியூ3, ஆடி கியூ5, ஆடி கியூ7, ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக், ஆடி ஆர்எஸ் 5 ஸ்போர்ட்பேக், ஆடி ஆர்எஸ் கியூ8 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஆடி இ டிரான் 50, இ டிரான் 55, இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்களை கொண்டிருக்கிறது. இதுதவிர இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர்கார்கள், ஆடி இ டிரான் ஜிடி மற்றும் ஆடி ஆர்எஸ் இ டிரான் ஜிடி மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

Spread the love