October 3, 2022

வர்த்தகர்கள் நவீனமயமாக வேண்டும்: ஸ்மிருதி இரானி

புது தில்லி, செப்.6

வர்த்தகர்கள் நவீனமயமாக வேண்டும் என்றும், தங்கள் தொழிலை முடிந்த அளவுக்கு எண்மமயமாக்க (டிஜிட்டல்) வேண்டும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தில்லியில் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில் தொழில் நடத்துவதற்கான தேசிய திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திட்டத்தை தொடக்கி வைத்து அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:

இப்போதைய நவீன உலகில் தொழில் சூழல் என்பது வேகமாக மாறி வருகிறது. அதற்கு ஏற்ப நமது நாட்டில் உள்ள வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தை நவீனமயமாக்க வேண்டும். முடிந்த அளவுக்கு தொழிலை எண்மமயமாக்க வேண்டும் என்றா. மேலும், நிகழ்ச்சியில் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுத் செயவர் பிரவீண் கண்டேல்வால் பேசியதாவது:

கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளைச் சேர்ந்த இணைய வழி வர்த்தக நிறுவனங்களும், பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்களும் இந்தியாவின் சில்லறை விற்பனைச் சந்தையைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்களுக்கு தொழில் சார்ந்து அறிமுகமாகியுள்ள நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதும், அதனைக் கற்பிப்பதும் அவசியமாக உள்ளது என்றார்.

Spread the love