October 3, 2022

வரும் மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் உயரும்: தருண் பஜாஜ்

புது தில்லி, செப்.16

அக்டோபர் மாதத்திலிருந்து, ஜிஎஸ்டி எனும், சரக்கு மற்றும் சேவை கட்டண வசூல், ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டும் என எதிர்பார்ப்பதாக, மத்திய வருவாய்த் துறை செயலர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த இரண்டு மாதங்களாக, ஜிஎஸ்டி, வசூலை 1.5 லட்சம் கோடியாக உயர்த்த, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், சில சமயங்களில் ரூ.2 ஆயிரம் கோடி; சில சமயங்களில் ரூ.6 ஆயிரம் கோடி என அந்த இலக்கிலிருந்து குறைவாகவே வசூலானது. ஆனால், அக்டோபர் மாதத்திலிருந்து, வருவாய் நிச்சயமாக ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டும் எனக் கருதுகறோம் என்றார்.

மேலும், அக்டோபர் மாத வசூல் குறித்த அறிவிப்பு, நவம்பரில் வெளியிடப்படும். அக்டோபரிலிருந்து, தொடர்ந்து ரூ.1.50 லட்சம் கோடி வசூல் இலக்கு எட்டப்பட்டு விடும் என, நிச்சயம் எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த ஆகஸ்டில், ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.43 லட்சம் கோடியாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தையும் சேர்த்து, தொடர்ந்து ஆறு மாதங்களாக, ரூ1.40 லட்சம் கோடியை தாண்டி வசூல் ஆகி வருகிறது. மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், ஒரே ஒருமுறை ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டி, ரூ.1.67 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.

Spread the love