November 29, 2022

வந்தே பாரத் ரயில் அட்டவணைப்படி இயங்கும்
தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, நவ.11

சென்னை சென்ட்ரல் – மைசூரு – சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நவ.12 முதல் தெற்கு ரயில்வே தொடங்குகிறது.

இது குறித்து விரிவான செய்தியாவது: சென்ட்ரல் – மைசூரு – சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சென்னை சென்ட்ரல் மற்றும் மைசூரு ஆகிய இரு இடங்களிலிருந்தும் நவம்பர் 12ம் தேதி முதல் இயக்கப்படும். இந்த ரயிலுக்கான எண்.20607/20608.சென்னை சென்ட்ரல் – மைசூரு – சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாரத்தில் 6 நாட்கள் (புதன்கிழமை தவிர) 2முனைகளிலிருந்தும் இயக்கப்படும்.

மேலும், இரண்டு சேவைகளுக்கும் காட்பாடி மற்றும் கேஎஸ்ஆர் பெங்களூருவில் மட்டுமே நிறுத்தப்படும். அதன்படி, சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே காலை 5.50 மணிக்கு புறப்படும். காட்பாடியில் காலை 7.21 முதல் 7.25 வரை நிற்கும் மற்றும் காலை 10.20 முதல் 10.25 வரை பெங்களுரு சென்றடையும். பின்னர் மதியம் 12.25 மணிக்கு மைசூரு சென்றடையும். மைசூரு- சென்னை இடையே மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு பெங்களுருவுக்கு மதியம் 2.55 முதல் 3 மணிக்கு சென்றடையும். காட்பாடிக்கு மாலை 5.36 முதல் 5.40 மணிக்கு சென்றடையும். இறுதியாக, சென்னைக்கு இரவு 7.30 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Spread the love