November 29, 2022

வணிக பயன்பாட்டு எரிவாயு உருளை விலை சரிவு

சென்னை, நவ.1

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு எரிவாயு உருளை விலை ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.2009க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை விலையை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது குறைத்திருப்பதால் உணவகம் நடத்துவோர் உள்ளிட்ட வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேநேரத்தில், வீட்டு உபயோக எரிவாயு உருளை விலையில் மாற்றமின்றி ரூ.1,068க்கு விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வது வழக்கம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன்படி, நவம்பர் மாதத்திற்கான எரிவாயு உருளையின் விலை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.116 குறைக்கப்பட்டு, ரூ.1,893க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலை மாற்றமின்றி ரூ.1,068க்கு விற்பனையாகிறது.

Spread the love