October 3, 2022

லேனோவா டேப் பி11, பி11 ப்ரோ மாடல்கள் அறிமுகம்

சென்னை, செப்.5

லெனோவா நிறுவனம் புதிய டேப் பி11, டேப் பி11 ப்ரோ மாடல்களை ஐஎப்ஏ 2022 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

இதன் சிறப்பம்சங்களாவது:

லெனோவா டேப் பி11 ப்ரோ மாடல் ஆனது 11.5-இன்ச் 2.5கே ஒஎல்இடி டிஸ்பி¼ள வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2560×1536 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

மீடியா டெக் கோம்போனியோ 1300டி சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது லெனோவா டேப் பி11 ப்ரோ மாடலில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு உள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

இதில் 8200 எம்ஏஎச் பேட்டரிஇருப்பதால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. லெனோவா டேப் பி11 மாடல் ஆனது 11.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2000 x 1200 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

இதில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 12எல் இயங்குதளத்தைக் 13எம்பி மெயின் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் 7700 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல். லெனோவா டேப் பி11 ப்ரோ மாடலின் விலை இந்திய மதிப்பில்ரூ.39,715)ஆக உள்ளது. டேப் பி11 மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.23,800)ஆக உள்ளது.

Spread the love