January 21, 2023

லெனோவோ 2-இன்-1 லேப்டாப்
இந்திய சந்தையில் அறிமுகம்

புது தில்லி, ஜன.17

லெனோவோ இந்தியா நிறுவனம் யோகா 9ஐ, 2-இன்-1 லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

யோகா சிரிசில் அறிமுகமாகி இருக்கும் புது 2-இன்-1 லேப்டாப் 13வது ஜெனரேசன் இண்டெல் கோர் பிராசஸர் மற்றும் இண்டெல் இவோ சான்று பெற்று இருக்கிறது.

புதிய லெனோவோ யோகா 9ஐ மாடலை- லேப்டாப், ஸ்டாண்ட், டெண்ட் அல்லது டேப்லெட் என நான்கு விதமாக பயன்படுத்த முடியும். இதில் 14-இன்ச் ஓஎல்இடி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 4கே ரெசல்யூசன் வசதி, டால்பி விசன் சான்று வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் லெனோவோ பிரெசிசன் பென் 2 வழங்கப்படுகிறது. இதில் உள்ள 13வது ஜென் இண்டெல் கோர் ஐ7-1360பி பிராசஸர், 16 ஜிபி எல்பிடிடிஆர்5 5 ரேம், 1 டிபி எம்.2 எஸ்எஸ்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் 2 எம்பி ஹைப்ரிட் எப்எச்டி / இன்ஃப்ராரெட் கேமரா, ஸ்மார்ட் ஃபே´யல் ரெகோக்னிசன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 75 வாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

Spread the love