September 27, 2022

லெனோவோ புதிய ஏஆர் கிளாஸ் அறிமுகம்

புது தில்லி, செப்.3

லெனோவோ நிறுவனம் கிளாசஸ் டி1 ஆக்மெண்டெட் ரியாலிட்டி கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏஆர் கிளாஸ் இரு கண்களிலும் மைக்ரோ ஓஎல்இடி டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இதில் உள்ள டிஸ்ப்ளே 1920×1080 பிக்சல் மற்றும் 60எர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் ஏஆர் கிளாஸ் டியுவி ரெயின்லாந்து சான்று பெற்று இருக்கிறது. மேலும் அதிக தரமுள்ள ஹின்ஜ்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டெம்பில் ஆர்ம்கள், நோஸ் பேட்கள் உள்ளன. இத்துடன் பயனர்களின் சவுகரியத்திற்கு ஏற்ப மூன்று வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய நோஸ் பேட்கள் வழங்கப்படுகின்றன. இதில் உள்ள இன்பில்ட் ஸ்பீக்கர்கள் பொழுதுபோக்கு தரவுகளை பார்க்கவும் வழி செய்கிறது. இந்த ஸ்மார்ட் ஏஆர் கிளாஸ் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மாடல்களுடன் இணைந்து செயல்பட ஏதுவாக ரெடி ஃபார் எனும் அம்சம் கொண்டிருக்கிறது.

மேலும், இவை ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் மற்றும் விண்டோஸ் சாதனங்களுடன் இணைந்து செயல்படும் திறன் கொண்டிருக்கிறது. இதை ஸ்மார்ட்போன் அல்லது கணினியுடன் இணைத்து பயன்படுத்தலாம். முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட் ஏஆர் கிளாஸ் அங்கு லெனோலோ யோகா கிளாசஸ் என அழைக்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் இந்த ஏஆர் கிளாஸ் விற்பனை அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

Spread the love