December 8, 2022

லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம்

சென்னை, நவ.8

இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா புதிய லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.9,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை தேதி குறித்து வெளியிடவில்லை. இதன் சிறப்பம்சங்களாவது:

இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் கிரீன் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் 7என்எம் மீடியாடெக் டைமண்சிட்டி 700 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 720×1,600 பிக்சல்ஸ்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு அறிமுகமானது. 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 5ஜி, புளூடூத் வி5.1, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை 802.11, ஜிபிஆர்எஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன். அதேபோல் ஜிஃப், எச்டிஆர், மேக்ரோ, மோசன், நைட், பனோரமா, போர்ட்ரெய்ட், ஸ்லோ மோ­ன் டைம்லேப்ஸ் போன்ற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

Spread the love